உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ், விஜய்சேதுபதி, இமானுக்கு தேசிய விருது : ஒத்த செருப்பிற்கு 2 விருது

தனுஷ், விஜய்சேதுபதி, இமானுக்கு தேசிய விருது : ஒத்த செருப்பிற்கு 2 விருது

புதுடில்லி : 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக தனுஷ், துணை நடிகராக விஜய் சேதுபதி, சிறந்த இசையமைப்பாளராக விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமான் தேர்வாகி உள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தமிழில் கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு கிடைத்துள்ளது.

இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்னையால் 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்தாண்டு அறிவிக்கப்படவில்லை. தற்போது 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று(மார்ச் 22) அறிவித்துள்ளது. அதன்படி 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த நடிகர் இரண்டு பேர்

இந்தாண்டு சிறந்த நடிகர்களாக இரண்டு பேர் தேர்வாகி உள்ளனர். ஒருவர் அசுரன் படத்தில் நடித்த தனுஷ். மற்றொருவர் ஹிந்தியில் போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.


சிறந்த நடிகை கங்கனா
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு மணிகர்னிகா, பங்கா படங்களில் நடித்ததற்காக கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அவற்றில் விருது வென்றவர்களும், சிறந்த திரைப்படங்களும் பற்றிய பட்டியல்..

சிறந்த திரைப்படம் : மரைக்கார் - அரபிக்கடலின்டே சிம்மம் (மலையாளம்)

சிறந்த அறிமுக இயக்குனர் இயக்கிய படத்திற்கான இந்திரா காந்தி விருது : ஹெலன் - மலையாளம்

சிறந்த என்டர்டெயின்மென்ட் விருது : மகரிஷி - தெலுங்கு

தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய நர்கிஸ் தத் விருது : தாஜ்மல் - மராத்தி

சமூகப் பிரச்சினைகளைச் சொன்ன சிறந்த படம் : ஆனந்தி கோபால் - மராத்தி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறந்த திரைப்படம் : வாட்டர் பரியல் - மோன்பா

குழந்தைகளுக்கான சிறந்த படம் : கஸ்தூரி - ஹிந்தி

சிறந்த நடிகர் : மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே - ஹிந்தி), தனுஷ் (அசுரன் - தமிழ்)

சிறந்த நடிகை : கங்கனா ரணவத் - மணிகர்ணிகா - தி குயின் ஆப் ஜான்சி, பங்கா (ஹிந்தி)

சிறந்த துணை நடிகர் : விஜய் சேதுபதி - சூப்பர் டீலக்ஸ் (தமிழ்)

சிறந்த துணை நடிகை : பல்லவி ஜோஷி - தி தாஷ்கன்ட் பைல்ஸ் (ஹிந்தி)

சிறந்த பின்னணிப் பாடகர் : பி பிராக் - கேசரி (ஹிந்தி) - தேரி மிட்டி....பாடல்

சிறந்த பின்னணிப் பாடகி : சவானி ரவீந்திரா - பர்டோ (ஹிந்தி) - ரான் பெட்டலா....பாடல்

சிறந்த ஒளிப்பதிவு : கிரிஷ் கங்காதரன் - ஜல்லிக்கட்டு (மலையாளம்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜனல்) : கௌசிக் கங்குலி - ஜியேஷ்தோபுத்ரோ (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (தழுவல்) : சிரிஜித் முகர்ஜி - கும்நாமி (பெங்காலி)

சிறந்த வசனம் : விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி - தி தாஷ்கன்ட் பைல்ஸ் (ஹிந்தி)

சிறந்த ஆடியோகிராபி : லொகேஷன் சவுண்ட் ரிக்கார்ட்டிஸ்ட் - தீபஜித் கயான் - யேவ்துப் (காசி)

சவுண்ட் டிசைனர் : மந்தர் கமலாபுர்கர் - திரிஜ்யா (மராத்தி)

பைனர் மிக்ஸ்ட் டிராக் : ரசூல் பூக்குட்டி - ஒத்த செருப்பு சை1 7 (தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு : நவீன் நூலி - ஜெர்ஸி (தெலுங்கு)

சிறந்த புரொடக்ஷன் டிசைன் : சுனில் நிக்வேகர், நிலேஷ் வாக் - ஆனந்தி கோபால் (மராத்தி)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : சுஜித் சுதாகரன், வி.சாய் - மரைக்கார், அரபிக்கடலின்டே சிம்மம் (மலையாளம்)

சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் : ரஞ்சித் - ஹெலன் (மலையாளம்)

சிறந்த இசை : பாடல் - டி.இமான் - விஸ்வாசம் (தமிழ்)

பின்னணி இசை : பிரபுத்தா பானர்ஜி - ஜியேஷ்தோபுத்ரோ (பெங்காலி)

சிறந்த பாடல் வரிகள் : பிரபு வர்மா - கொலாம்பி (மலையாளம்) - ஆரோடும் பரயுகா வய்யா....பாடல்

சிறந்த நடுவர் சிறப்பு விருது : ஒத்த செருப்பு சைஸ் 7 (தமிழ்)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : சித்தார்த் பிரியதர்ஷன் - மரைக்கார், அரபிக்கடலின்டே சிம்மம் (மலையாளம்)

சிறந்த நடனம் : ராஜு சுந்தரம் - மகரிஷி (தெலுங்கு)

சிறந்த சண்டைக்காட்சி : விக்ரம் மோர் - அவனே ஸ்ரீமன்நாராயணா (கன்னடம்)


சிறந்த பிராந்திய மொழித் திரைப்பட விருதுகள் (தென்னிந்திய மொழிகள் மட்டும்)
தமிழ் - அசுரன்
தெலுங்கு - ஜெர்ஸி
கன்னடம் - அக்ஷி
மலையாளம் - கள்ள நோட்டம்
ஹிந்தி - சிச்சோர்

சிறப்பு மென்ஷன் - பிரியாணி (மலையாளம்)


ஒத்த செருப்புக்கு இரண்டு தேசிய விருது

பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, நடித்து, தயாரித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்காக சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


அளவில்லா ஆனந்தம் - தாணு

அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ‛‛மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 1992ல் வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக பாலுமகேந்திரா மூலம் என் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அவரது வழியில் வந்த வெற்றிமாறன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு தேசிய விருது இப்போது கிடைத்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அளவில்லா ஆனந்தத்தில் திளைக்கிறேன். இந்த மாபெரும் வெற்றியை வெற்றிமாறனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !