டான் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது
ADDED : 1766 days ago
டாக்டர் படத்தை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. அட்லீயிடம் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
கல்லூரி பின்னணியின் கதைக்களம் கொண்ட இந்தப்படத்தின் முதல்டட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலே இன்றுமுதல் துவங்கி உள்ளது. பிரபலமான தியேட்டர் ஒன்றில் இன்றைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.