'சுல்தான்' டிரைலருக்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா
ADDED : 1656 days ago
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'சுல்தான்' படத்தின் இசை நேற்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது.
இந்த டிரைலருக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்திற்கு இசையமைக்கும் விவேக் - மெர்வின் டிரைலருக்கு இசையமைக்காதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
பொதுவாக முன்னணி இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்காத படங்களுக்கு இப்படி இசையமைப்பதில்லை. இந்தப் படத்திற்கு யுவன்தான் பின்னணி இசை அமைத்துள்ளாராம். அதனால், டிரைலருக்கும் அவரே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
படத்தில் சில அதிடியான காட்சிகள் இருப்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் இருந்தால் நன்றாக இருக்கும் என நட்பாக யுவனிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் சம்மதித்து பிரமாதகமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.