'3 இடியட்ஸ்' தொடர்புடன் கொரோனாவை அறிவித்த மாதவன்
ADDED : 1701 days ago
தமிழ், ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதை அவர் அறிவித்த விதம் தான் வித்தியாசமானது.
ஹிந்தி நடிகரான ஆமீர் கான் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் '3 இடியட்ஸ்' படத்தில் இணைந்து நடித்தவர் மாதவன். அதனால், ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தனக்கு கொரோனா வந்ததைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
“ராஞ்சோவைப் பின் தொடரும் பர்ஹான். வைரஸ் எங்களுக்குப் பின்னால் எப்போதும் உள்ளது. ஆனால், இந்த முறை அவர் எங்களைப் பிடித்துவிட்டார். ஆனால், அனைவரும் நலம். கோவிட்டும் சீக்கிரம் நலம் பெற்றுவிடும். இந்த இடத்தில் ராஜு வரக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் குணமடைந்து வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.