உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் சர்க்கஸ்

பாலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் சர்க்கஸ்

அறிமுகமான சமயத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டவர் தான் தற்போது தெலுங்கில் முன்னனணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படம் மூலம் தோல்வியில் ஆரம்பித்த இவரது அறிமுகம், இதோ இப்போது விஜய்ய்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு மீண்டும் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.. இந்தநிலையில் பாலிவுட்டிலும் நடிக்கும் இவர் சத்தமில்லாமல் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார் பூஜா ஹெக்டே.

முதலில் சல்மான்கான் படத்தில் தான் இவர் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சர்க்கஸ் என்கிற படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் ரோஹித் ஷெட்டியுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சமீபத்தில் ரோஹித் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னபோதுதான் இந்தப்படத்தில் பூஜா நடித்துள்ளார் என்பதே தெரியவந்துள்ளது. படத்தில் இன்னொரு நாயகியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !