'வாத்தி கம்மிங்' - செம ஆட்டம் போட்ட விஜய்யின் முன்னாள் கதாநாயகி
'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் தமிழ்நாட்டைக் கடந்து வட இந்தியாவிலும் பரவியது. அதற்கு அஷ்வின் உள்ளிட்ட சில விளையாட்டுப் பிரபலங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
பல சினிமா பிரபலங்களும் அந்தப் பாடலுக்கு நடனமாக அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அந்த வரிசையில் விஜய்யின் முன்னாள் கதாநாயகியாக இஷா கோபிகர் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்டு அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
விஜய் நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சினிலே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இஷா கோபிகர். அதன் பின் விஜயகாந்த் ஜோடியாக 'நரசிம்மா' படத்தில் நடித்தார். 20 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இஷாவின் நடனம் விஜய் ரசிகர்களையும் கவரும். அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது.