உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமன்னா படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தமன்னா படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தெலுங்கில் கோபிசந்துடன் இணைந்து தமன்னா நடித்துள்ள படம் சீட்டிமார். சம்பத் நந்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை வரும் ஏப்.,2ல் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த தேதியில் நாகார்ஜூனாவின் வைல்டு டாக், கார்த்தியின் சுல்தான் ஆகிய படங்கள் வெளியாவதால், இப்படம் பின்வாங்கி விட்டது. தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி, கொரோனா பரவல் அதிகரித்து வருவது போன்ற காரணங்களை முன்வைத்து சீட்டிமார் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !