உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய காஜல்

கணவருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய காஜல்

கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தொடர்ந்து இந்தியன்-2, ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதோடு வெங்கட்பிரபு இயக்கிய லவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியலிலும் நடித்தார். இந்நிலையில், இன்றைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து தனது கணவர் கவுதம் கிச்சுலுவுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய காஜல் அகர்வால், அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதோடு, இந்த ஹோலி பண்டிகை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மையான எண்ணம், நல்ல ஆரோக்கியத்தை தரும் என்றும் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !