இளையராஜாவை சந்தித்த மத்திய அமைச்சர்
ADDED : 1666 days ago
பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேறிய பின் சென்னை தி.நகரில் தனது பெயரிலேயே ஒரு புதிய ஸ்டுடியோ உருவாக்கி உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தற்போது இந்த ஸ்டுடியோவில் தான் அவரின் இசைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய ஸ்டுடியோவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக் உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து பேசினர். இப்படியான நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛பத்மவிபூஷண் இளையராஜாவை சென்னையில் சந்தித்த மகிழ்வான தருணம்'' என தமிழில் டுவீட் செய்துள்ளார் கிஷன் ரெட்டி.