இயக்குனராக மாறிய "அட்டக்கத்தி" தினேஷ்
ADDED : 1665 days ago
பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். தொடர்ந்து ‛ஒரு நாள் கூத்து, குக்கூ, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது வாராயோ வெண்ணிலாவே போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக இயக்குனராக களமிறங்குகிறார். இவர் இயக்கும் முதல் படத்திற்கு “வயிறுடா” என பெயரிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் வில் ஏந்தி யாருக்கோ குறி வைப்பது போன்று தினேஷ் போஸ் கொடுத்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கலாம் என தெரிகிறது. விரைவில் படம் பற்றிய முழு விபரத்தையும் அறிவிக்க உள்ளார்.