லால் எனக்கு கட்டப்பா : கார்த்தி
ADDED : 1666 days ago
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‛சுல்தான்'. நாயகியாக ராஷ்மிகா மந்தனா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் நெப்போலியன், லால் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்., 2ல் திரைக்கு வர உள்ளது.
கார்த்தி கூறுகையில், ‛‛சுல்தான் படத்தில் லால் அவர்கள் படம் முழுதும் என்னுடன் பயணிப்பது மாதிரி அவரது வேடம் இருக்கும். என்னுடைய ஒவ்வொரு உணர்விலும் கூடவே இருப்பது போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. சண்டை, நடனம், உணர்வுப்பூர்வமான நடிப்பு என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்துள்ளார். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன் என்றார்.