ப்ரீ வெட்டிங் ஷுட் - அசத்தும் மெஹ்ரின்
ADDED : 1708 days ago
நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீின் பிர்சாடா. இவருக்கும், இவரது காதலர் பவ்யா பிஷ்னாவிற்கும் கடந்த மார்ச் 12-ந்தேதி ராஜஸ்தானில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் மெஹ்ரின். விரைவில் திருமண வைபவம் நடைபெற உள்ள நிலையில், தற்போது திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெட்டிங் ஷூட் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு, ‛‛இது தான் காதல், இது தான் வாழ்க்கையை தெய்வீகமாக்குகிறது'' என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலானது.