மேஸ்ட்ரோ : அந்தாதுன் தெலுங்கு ரீமேக் டைட்டில் அறிவிப்பு
ADDED : 1649 days ago
ஹிந்தியில் ஆயுஷ்மான் குராணா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கில் தொடங்கப்பட்ட இதன் ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை மேர்லபகா காந்தி என்பவர் இதை இயக்கி வருகிறார். நேற்று நிதின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்திற்கு மேஸ்ட்ரோ என டைட்டில் அறிவித்துள்ளனர்.
அதேசமயம் தமிழில் இதன் ரீமேக், நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் உருவாகிறது. இதை அவரது தந்தை தியாகராஜனே இயக்கி, தயாரிக்கிறார். மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்க, ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்தப்படத்தை இயக்குகிறார்.