உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவின் சிறப்பான 25வது பிறந்தநாள்

ராஷ்மிகாவின் சிறப்பான 25வது பிறந்தநாள்

தெலுங்கில் சாலோ என்ற படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து கீதா கோவிந்தம், பீஷ்மா, சாரிலேரு நீகேவரு போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகையாகி விட்டார். மேலும் கடந்த ஏப்ரல் 2-ந்தேதி வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு,குட்பை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏப்ரல் 5-ந்தேதியான நாளை தனது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ராஷ்மிகா. இந்த பிறந்தநாளை அமிதாப்பச்சனுடன் நடிக்கும் குட்பை ஹிந்தி படத்தின் செட்டில் கொண்டாடப்போவதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா, இது என்னுடைய பிறந்த நாட்களில் சிறப்பான பிறந்த நாள் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !