உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குருவாயூர் கோயிலில் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்

குருவாயூர் கோயிலில் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்

அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர் தற்போது கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் தனது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த பிறகு எடுத்த போட்டோக்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் கேரள பாரம்பரிய சேலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு ஆனந்தமான காலை. புன்னகைக்கும் கண்களுடன் சிரித்த முகம். இந்த சேலையை அணிய நான் அர்த்தம் கொண்டிருந்தேன். இறுதியாக நான் அணிந்தேன். பூர்ணிமா பிராணாவுக்கும், ஸ்டைலிஸ்டாக இருந்த எனது அம்மாவுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !