கொரோனாவிலிருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்
ADDED : 1648 days ago
மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இந்நோயிலிருந்து குணமாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா கெட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சி உடன் டுவிட்டரில் பகிர்ந்து இருப்பவர், சட்டசபை தேர்தலில் தான் ஓட்டளித்ததையும் பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.