ஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2
ADDED : 1726 days ago
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் இளம் நடிகர் வருண் தேஜ் இருவரும் இணைந்து நடித்திருந்த படம் எப்-2.. கதாநாயகிகளாக தமன்னா, மெஹ்ரீன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. இதன் அடுத்த பாகமாக தற்போது எப்-3யும் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் எப்-2 படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ள, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.. வருண் தேஜ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் கபூர் நடிக்க இருக்கிறார்.. அனீஸ் பாஸ்மி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் முடிவாகவில்லை என சொல்லப்படுகிறது.