மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1612 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1612 days ago
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். திரையுலகினர் பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்ட சில பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
அந்தவகையில் நடிகை ராதிகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பிரச்சார் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று செக் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
இவரைப்போன்று நடிகை நக்மாவும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.
1612 days ago
1612 days ago