மாஸ்டர் தந்த அடையாளம் - லோகேஷ் கையால் காரை பெற்ற மகேந்திரன்
ADDED : 1643 days ago
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து கவனம் ஈர்த்தார். இப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்துள்ளது. இந்நிலையில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார் மகேந்திரன். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்று, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், ‛‛100க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும் மாஸ்டர் படம் தான் என்னை தனித்து அடையாளம் காண வைத்தது. இப்போது படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறேன். அதனால் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை பெற வேண்டும் என்று விரும்பினேன். வாழ்க்கையில் நான் வாங்கும் முதல் கார் இது. இன்று முதல் என் பயணத்தை தொடங்குகிறேன் என மகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.