கர்ணன் பற்றி விஜய்சேதுபதி சொன்ன விஷயம்
ADDED : 1640 days ago
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான கர்ணன் படம் நேற்று வெளியாகியுள்ளது. சிலர் அசுரன் போல இல்லையே என்றும், இன்னும் சிலர் மாரி செல்வராஜின் முந்தைய படமான பரியேறும் பெருமாள் சாயலிலேயே இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் இதற்கு இருவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரின் முந்தைய படங்களினால் எழுந்த அதீத எதிர்பார்ப்பு தான் இப்படி கலவையான விமர்சனங்கள் வெளிவர காரணம் என்றே சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தை பார்த்த நடிகர் விஜய்சேதுபதி, இது பார்த்தே ஆகவேண்டிய படம் என்றும் சொல்லும் விதமாக “மிகச்சிறப்பான படம்.. மிஸ் பண்ணாதீர்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.