தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு
ADDED : 1640 days ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 23ல் இப்படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட் நிலையில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியிருப்பதால் இப்படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.