சின்னத்தம்பி-க்கு வயசு 30 - குஷ்பு நெகிழ்ச்சி
ADDED : 1684 days ago
பி.வாசு இயக்கத்தில் இளையராஜா இசையில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் 1991ல் வெளியான சூப்பர் ஹிட் படம் ‛சின்னத்தம்பி'. இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகி உள்ளது. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛ஒரு முத்தான படம் வெளியாகி 30 ஆண்டுகளாகிவிட்டது. இப்படம் மூலம் சினிமாவின் போக்கையே மாற்றி உள்ளோம். காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது. எனது இயக்குனர் பி.வாசு, இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் பாலு (சமீபத்தில் இவரை இழந்தோம்), எனக்கு மிகவும் பிடித்த பிரபு ஆகியோருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.