கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன்
ADDED : 1685 days ago
நடிகர் மாதவன் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தனர். இந்நிலையில் அனைவரும் இதிலிருந்து மீண்டுள்ளனர். இதுப்பற்றி, ‛‛எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான், அம்மா உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கடவுள் அருளால் அனைவரும் நோயிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டோம். இருப்பினும் கொரோனா தடுப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக உள்ளோம்'' என தெரிவித்துள்ளார் மாதவன்.