சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது
ADDED : 1685 days ago
தடகளத்தில் சாதித்த வீராங்கனை சாந்தியின் வாழ்க்கை, சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண் என்ற பெயரில் படமாக உருவாகிறது. ஜெயசீலன் தவப்புதல்வி இயக்குகிறார். முன்னணி நடிகை ஒருவர் அவரது வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பை சாந்தி கிளாப் அடித்து துவக்கி வைத்தார். சாந்தியிடம் முறையான அனுமதி பெற்று இப்படத்தை எடுத்து வருகின்றனர்.