உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி

தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி

தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்த அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் நானி, சுதீர் பாபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், தனுஷ் நடித்த மாரி, மாரி-2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன், மீண்டும் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு கிர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களில் இவர் நடிக்கப் போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !