கபடி பயிற்சியில் துருவ் விக்ரம்
ADDED : 1685 days ago
ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தனது தந்தை விக்ரம் உடன் நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். தமிழக கபடி விளையாடடு வீரர் ஒருவர், ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஒரு பயிற்சியாளரை நியமித்து துருவ் விக்ரமிற்கு தீவிர கபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.