‛ரைட்டர்' சமுத்திரகனி
ADDED : 1773 days ago
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நாயகனாக நடித்து வரும் படம் ரைட்டர். காவல் துறையில் பணிபுரியும் ரைட்டராக அதிகார மையத்தில் பணிபுரியும் எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிராங்ளின் ஜேக்கப் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசை. நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
‛‛வழக்கமான சமுத்திரக்கனியை இப்படத்தில் பார்க்க முடியாது. அவரது சினிமா பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் பிராங்ளின்.