கோஸ்டி-யில் சிக்கிய காஜல் அகர்வால்
ADDED : 1638 days ago
தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் அடுத்து கோஸ்டி என்ற அரசியல், திரில்லர் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இவருடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சுரேஷ் மேனன், ஊர்வசி, நரேன், சந்தானபாரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கல்யாண் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். பார்லிமென்ட் பின்னணியில் நடிகர்கள் பலரும் அரசியல்வாதி போன்ற தோற்றத்தில் இருப்பது போன்று போஸ்டர் அமைந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.