ஆச்சார்யா : ராம்சரண் - பூஜா ஹெக்டேவின் போஸ்டர் வெளியீடு
ADDED : 1684 days ago
கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வரும் படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவியை மையமாகக் கொண்ட போஸ்டர், டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது ராம்சரண் - பூஜா ஹெக்டே இடம்பெறும் முதல் ரொமான்டிக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மே 13ல் திரைக்கு வர இருந்த ஆச்சார்யா படம் கொரோனா தொற்று காரணமாக மாற்றுத் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜூன் 18க்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.