கொரோனாவிலிருந்து மீண்ட ஆலியாபட்
ADDED : 1638 days ago
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஆலியாபட்டிற்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவர், மும்பை இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்திருந்தார். அதன்காரணமாக அவர் நடித்து வந்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதோடு, எதிர்மறையாக இருப்பது ஒரு நல்ல விசயம் என்று பதிவிட்டு, கொரோனாவில் இருந்து தான் விடுபட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியாவாடி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.