உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடிவாசல் இசைப்பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

வாடிவாசல் இசைப்பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

பாண்டிராஜ் இயக்கும் தனது 40ஆவது படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது டுவிட்டரில், ‛‛வாடிவாசல் படத்திற்கான இசைப்பணியை தான் தொடங்கி விட்டதாக'' ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் டிரன்டிங் செய்து வருகின்றனர். மேலும் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசலில் இறங்கி விடுவார் என்பதை ஜி.வி.பிரகாஷின் இந்த செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !