மாரி செல்வராஜின் வீட்டுக்கே சென்று பாராட்டிய விக்ரம்
ADDED : 1635 days ago
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்கள பெற்றாலும் வசூல் சிறப்பாகவே உள்ளது.
இந்தநிலையில் கர்ணன் படத்தை சிறப்பாக கொடுத்ததற்காக இயக்குனர் மாரி செல்வராஜை அவரது வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார் நடிகர் விக்ரம். தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.