தனுஷ் பட வில்லன் டொவினோ தாமஸுக்கு கொரோனா
ADDED : 1635 days ago
கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாகி உள்ள நிலையில், அதற்கு திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை.. அந்தவகையில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தனக்கு கொரோனா பாசிடிவ் என்றும், தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், 'கள' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸுக்கு, சண்டைக்காட்சியின்போது வயிற்றுப்பகுதியில் அடிபட்டது. அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார்.