மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1603 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1603 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1603 days ago
வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணம் ஆன பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள சமீரா, படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகள், அவர்களின் ஒவ்வொரு விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் அவ்வப்போது டிப்ஸ் கொடுப்பவர், டிக்டாக் செய்து வீடியோவும் வெளியிடுவார். இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார் சமீரா.
அவர் கூறுகையில், ‛‛நேற்று கொரோனா பரிசோதனை செய்தேன், பாசிட்டிவ் என வந்தது. இருப்பினும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடவுளின் அருளால் சாஸி, சாசுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் மனஉறுதியாக இருக்க வேண்டிய தருணம் இது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார் சமீரா.
1603 days ago
1603 days ago
1603 days ago