ராமநவமி ஸ்பெஷலாக துல்கரின் தெலுங்கு பட டீசர் வெளியீடு
ADDED : 1629 days ago
மலையாளம், தமிழை தாண்டி 'மகாநடி' படத்தின் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்தார் துல்கர் சல்மான். இந்தநிலையில் அந்தப்படத்தை தொடர்ந்து, தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.. இன்று ராமநவமியை முன்னிட்டு ரசிகர்களுக்காக இந்தப்படத்தில் துல்கரின் கதாபாத்திர பெயரை அறிமுகப்படுத்தும் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.