பாதியிலேயே நிறுத்தப்பட்ட படம் ; தனுஷ் நாயகி வருத்தம்
ADDED : 1629 days ago
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இவர் தற்போது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கோ-கோவை மையப்படுத்தி மலையாளத்தில் உருவாகியுள்ள கோ-கோ என்கிற படத்தில் கதாநாயகியாக, கோகோ பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தப்படமும் கடந்த ஏப்-14ல் ரிலீஸானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரிடமும் பாராட்டு பெற்றது.
இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தற்போது கேரளாவிலும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தனது படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படி பாதியில் நிறுத்தப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரஜிஷா விஜயன்.
மேலும், “வேறு ஒரு தளம் மூலமாக உங்களை இந்தப்படம் வந்தடையும்” என்றும் கூறியுள்ள ரஜிஷா, இந்தப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளார்..