“வக்கீல் சாப்'புக்கு மட்டும் 3 நாட்கள் சலுகை
ADDED : 1629 days ago
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்திருக்கும் ஊரடங்குக்கு ஏற்ப, காட்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.. ஆனால் தெலுங்கானாவிலோ, இன்றுமுதல்; படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை தெலுங்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. இதனால் இந்தவாரம் ரிலீசாக இருந்த பிரியா பிரகாஷ் வாரியார் நடித்துள்ள 'இஷ்க்' என்கிற படத்தின் ரிலீஸும் தள்ளிப்போயுள்ளது.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்க வந்துகொண்டிருப்பதால் இந்தப்படத்திற்கு மட்டும் வெள்ளிகிழமை வரை தியேட்டர்களில் திரையிடுவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.