கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால்
ADDED : 1776 days ago
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டன. படப்பிடிப்புகளும் வெகுவாக குறைந்து விட்டன. அதேசமயம் மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக தான் இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பாரோஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட அவர், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். வரலாற்று படம் என்பதால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து, யாருடைய தொந்தரவும் இல்லாமல் படத்தை இயக்கி வருகிறார் மோகன்லால். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.