லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1628 days ago
மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாபம். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலை பிப்ரவரி14-ந்தேதி வெளியிட்ட நிலையில் நேற்று யாமிலி என்று தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. பா.ரஞ்சித் வெளியிட்ட அந்த பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். இந்நிலையில், எஸ்.பி.ஜனநாதனின் சிகப்பு சிந்தனையில் உருவாகியுள்ள இந்த லாபம் படம் மே மாதம் ரம்ஜான் அன்று திரைக்கு வருகிறது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.