உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி

என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதன்காரணமாகவே அவரது பெயருடன் பரோட்டா என்பதும் ஒட்டிக்கொண்டது. அந்த வகையில் பல வருடங்களாக காமெடியனாக மட்டுமே வலம் வந்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சத்யமங்கலம் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அங்கு நிலவிய சீதோஷ்னம் தனது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் படத்தில் இருந்து அவர் விலகினார்.

அதையடுத்து அந்த வேடத்திற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று வெளியான விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி போலீஸ் வேடத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார் சூரி. அதில், என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் வெற்றி மாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா இளையராஜா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புதிய பரி மாணத்தில் மாமா விஜயசேது பதியுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார் சூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !