உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன்

ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன்

கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான படம் 'அடி கப்பியாரே கூட்டமணி'. ஒரு காரணத்துக்காக பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த ஒரு இளம்பெண், மூன்று நாட்கள் அவளை மற்றவர்களிடம் இருந்து மறைக்க படாதபாடு படும் இளைஞன், என்கிற சுவாரஸ்யமான கற்பனையை நூறு சதவீத காமெடியாக கொடுத்திருந்தார்கள்.. நயன்தாரா நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கிய தயன் சீனிவாசன் கதாநாயகனாகவும், நமீதா பிரமோத் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக கடந்த சில வருடங்களாகவே அவ்வப்போது செய்திகள் எழுந்து அப்படியே அமுங்கி விடும்.. ஆனால் தற்போது ஒரு வழியாக அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் கூட்டணியில் ஹாஸ்டல் என்கிற பெயரில் இந்தப்படம் வெற்றிகரமாக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சுமந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாசர், முநீஷ்காந்த், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குளிர் 100 டிகிரி படத்துக்கு இசையமைத்த போபோ சசி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !