உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்!

தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்!


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மலையாள நடிகர் மம்மூட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் தனுஷ், சாய் பல்லவி உடன், 'ஹிட் 3' படத்தில் நடித்த சைத்து ஜொனலகட்டா என்பவர் இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் சித்து ஜொனலகட்டாவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !