ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்!
ADDED : 10 hours ago
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 173வது படத்தை இயக்குகிறார், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது என சிபி சக்கரவர்த்தி உறுதி செய்தார். தற்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக தமிழில் வெளிவந்த 'அமரன்' பட ஒளிப்பதிவாளர் சாய் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்போது சாய், தெலுங்கில் 'தி பாரடைஸ்' என்கிற நானி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.