தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் மறைவு
ADDED : 1624 days ago
நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான டாக்டர்.என்.எஸ்.மோகன்(68) மூச்சு திணறல் பிரச்னையால் காலமானார்.
தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்கிஸ் மூலம் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். இவரது மாமனார் என்.எஸ்.மோகன். பெதர் டச் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில் வா, மாஞ்சா வேலு, மலை மலை, தடையற தாக்க உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்களில் பெரும்பாலும் அருண் விஜய் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில் மூச்சுதிணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த மோகன் இன்று(ஏப்.,27) காலமானார். அவருக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது தமிழ் சினிமா உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.