கொரோனா அறிகுறி : தனிமைப்படுத்தி கொண்ட நந்திதா
ADDED : 1674 days ago
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, இடம் பொருள் ஏவல், புலி, கலகலப்பு 2, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்திதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என்று கூறியுள்ளார்.