உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் துல்கர் படத்தை இயக்கும் காமெடி நண்பர்

மீண்டும் துல்கர் படத்தை இயக்கும் காமெடி நண்பர்

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என கைவசம் மொழிக்கு ஒன்றாக படங்களை வைத்திருக்கிறார் துல்கர் சல்மான். தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி என்பவர் டைரக்சனில் ராணுவ வீரராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தனது நண்பரும் மலையாள சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் துல்கர் சல்மான். துல்கருடன் இணைந்து சார்லி, கலி, என 5 படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !