மூத்த குணசித்திர நடிகர் செல்லதுரை காலமானார்
ADDED : 1621 days ago
தமிழ் சினிமாவின் மூத்த குணசித்திர நடிகர் செல்லத்துரை நேற்று மாலை காலமானர்.
மதுரையை சேர்ந்த செல்லத்துரை, ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தவர், முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் ஒருவராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய்யின் தெறி, தனுஷின் மாரி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, நயன்தாராவின் அறம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.