உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரந்தீர் கபூருக்கு கொரோனா

ரந்தீர் கபூருக்கு கொரோனா

கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல பாதுகாப்புடன் இருக்கும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இரண்டாம் அலையில் இதுவரை நீல் நிதின் முகேஷ், சோனு சூத், மனிஷ் மல்ஹோத்ரா, கத்ரீனா கைப், அக்ஷய் குமார், கோவிந்தா, பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், மற்றும் ரோஹித் சரப் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூர் கொரோனா தொற்றின் காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு நேற்று இரவு சுவாச பிரச்னை ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருந்தும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

74 வயதான ரன்தீர் கபூர் பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பாலிவுட் நடிகைகள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் ஆகியோரின் தந்தை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !