மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1614 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1614 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1614 days ago
தமிழ்த் திரைப்படத் துறையில் உள்ள இரண்டு முக்கிய சங்கங்களான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை கடந்த சில வருடங்களாகவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகின்றன.
நடிகர் சங்கத்திற்காக பல மாடி கட்டிடம் உருவாக்கப்பட்டு அது அப்படியே பாதியில் நிற்கிறது. தேர்தல் முடிந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நீதிமன்ற உத்தரவிற்காகக் காத்திருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் அந்த சங்கத்தின் சில உறுப்பினர்கள் பிரிந்து, கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனவும், தேர்தலுக்குப் பின்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளார் சங்கம் எனவும் ஆரம்பித்தார்கள்.
ஒரு திரைப்படத்திற்கு சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கடிதம் வழங்கினால் மட்டுமே அப்படத்தை சென்சார் செய்வார்கள். அப்படியான அங்கீகாரம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சங்கங்களுக்கு இல்லாமல் இருந்தது. தற்போது அந்த இரண்டு சங்கங்களுக்கும் அந்த அங்கீகாரத்தை வழங்கிவிட்டார்கள். இதன் மூலம் அந்த இரண்டு சங்கங்களும் தற்போது புதிய பலத்தைப் பெற்றுவிட்டன.
இதனால், தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான முக்கியத்துவம் குறைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, புதிய சங்கத்தை ஆரம்பித்தவர்களை தங்களது சங்கத்தை விட்டு விலக்குவோம் என தாய் சங்கம் கூறி வந்தது.
இப்போது, புதிய சங்கத்திற்கம் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால், புதிய சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை தங்கு தடையின்றி நடைபெறும். ஏற்கெனவே இருக்கும் சங்கங்களால் தமிழ் சினிமா தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய சங்கமான தயாரிப்பாளர் சங்கத்திலேயே இத்தனை பிரிவு சங்கங்கள் என்றால் அதை மற்ற சங்கங்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ ?.
1614 days ago
1614 days ago
1614 days ago