மன அழுத்தம் போக்க பின்னல் வேலையில் இறங்கிய காஜல்
பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு எப்போதுமே, படப்பிடிப்பு, திரைப்பட விழாக்கள் என பிசியாகவே இருந்து பழகியவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டம் மிக சோதனையான ஒன்றாகவே அமைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் இருந்து மீண்டு, ஒருவழியாக சகாஜ் நிலைக்கு திரும்ப ஆரம்பித்தவர்களை கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மீண்டும் முடக்கி போட்டுள்ளது.
வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஒவ்வொருவரும், யோகா, தோட்ட பராமரிப்பு என ஒவ்வொரு விதமான முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகை காஜல் அகர்வாலோ நூலையும் ஊசியையும் கையில் எடுத்து பின்னல் வேலைகளில் இறங்கிவிட்டார்.
இதுகுறித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், “பொதுவாகவே இதுபோன்ற சமயங்களில் ஒரு ஆதரவின்மையும் கவலையும் ஏற்படுவது இயல்பு.. அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க நான் பின்னல் வேலையை துவங்கி விட்டேன்., நமக்கு பிடித்தவர்களுக்காக நம் கையாலேயே விதவிதமான பின்னல் வேலைப்பாடுகளை செய்வதும் ஒரு சுகமான அனுபவம் தானே..” என கூறியுள்ளார்.